Our Feeds


Saturday, February 18, 2023

Anonymous

மின் கட்டண அதிகரிப்பு பாதாள உலக செயற்பாடுகளுக்கு நிகரான நடவடிக்கை - மின்சாரசபை பொறியியலாளர்களின் சங்கம்

 



(எம்.ஆர்.எம்.வசீம்)


மின் உற்பத்திக்கான செலவை குறைப்பதற்கு சந்தர்ப்பம் இருக்கின்ற நிலையில்  மின்சார கட்டணத்தை அதிகரிக்க எடுத்த தீர்மானத்திற்கு இனங்கமுடியாது.

இது பாதாள உலக செயற்பாடுகளுக்கு நிகரான நடவடிக்கையாகும் என மின்சாரசபை பொறியியலாளர்களின் சங்கத்தின் தலைவர் நிஹால் வீரரத்ன தெரிவித்தார்.

மின்சார கட்டணத்தை அதிகரிப்பதற்கு அரசாங்கம் எடுத்திருக்கும் தீர்மானம் குறித்து கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

இதுதொடர்பாக அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,

அதிகரிக்கப்பட்டிருக்கும் மின்சார கட்டணத்துக்கு இனங்க முடியாது. மின் உற்பத்தி செலவை காரணம் காட்டியே மின்சார கட்டணம் அதிகரிக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

ஆனால் மின்சார உற்பத்தி செலவை குறைப்பதற்கு சந்தர்ப்பங்கள் இருந்தும் அதனை செய்யாமல், அதிக உற்பத்தி செலவில் மின் உற்பத்தி செய்வதாலே கட்டணம் அதிகரிக்கவேண்டி ஏற்பட்டிருக்கிறது

மின்சார கட்டணம் தொடர்பாக நியாயமான விலை அதிகரிப்பை மேற்கொள்ள பாெதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றே நாங்கள் அவர்களின் பால் இதனை சாட்டிவந்தோம். 

ஆனால் அவர்கள் இதுதொடர்பாக அறிக்கை விடுத்துக்கொண்டிருந்தார்களே தவிர எதுவும் செய்யாமல் இருந்தனர். இதுதொடர்பாக திடீரென அவர்களின் .சத்தம் குறைந்தது. அதன் பின்னர் அதன் உறுப்பினர்கள் சிலர் விலகினர். 

அந்த வெற்றிடங்களுக்கு அரச தரப்பால் உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டனர். ஆனால் இவர்களின சுயாதீனத்தன்மை தொடர்பில் எங்களுக்கு பிரச்சினை இருக்கிறது.

அத்துடன் மின்சார கட்டண அதிகரிப்புக்கு எதிராக குரல்கொடுத்து வந்த பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு உறுப்பினர்களில் இரண்டு பேரில் ஒருவர் எந்த பதிலும் இல்லாமல் ஒதுங்கிக்கொண்டார். 

மற்றவர் சத்தம் இல்லாமல் இருக்கிறார். என்ன நடக்கிறது என எங்களால் உணர்ந்துகொள்ள முடியாமல் இருக்கிறது. அதனால் இந்த மின கட்டண அதிகரிப்பானது பாதாள உலகம் செயற்பட்டதுபோல் திடீரே அதிகரிக்கப்பட்டுள்ளது.

அதனால் இந்த மின் கட்டண அதிகரிப்பில் எந்த நியாயமும் இல்லை. இதற்கு நாங்கள் இனங்கப்போவதில்லை. இதுதொடர்பாக அடுத்த கட்ட நடவடிக்கைக்கு செல்வது தொடர்பில் கலந்துரையாடி வருகிறோம் என்றார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »