திருகோணமலை - கன்னியா - சர்தாபுர வீதியில் பசளை உறையில் போடப்பட்டிருந்த நிலையில் ஆண் சிசுவொன்று மீட்கப்பட்டுள்ளது.
முச்சக்கரவண்டியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் தனது பிள்ளைக்காக மருந்து எடுப்பதற்காக இன்று (04) கன்னியா சர்தாபுர வீதியினூடாக பயணித்துக் கொண்டிருந்தபோது பசளை உறையில் வெள்ளைத் துணியினால் சுற்றப்பட்ட நிலையில் இருப்பதை அவதானித்துள்ளனர்.
இதனை அடுத்து குறித்த குடும்பத்தினர் சிசு கிடந்த இடத்துக்கு அருகில் உள்ளவர்களை அழைத்து சிசுவை கைப்பற்றியதாகவும் தெரிய வருகின்றது.
இதனை அடுத்து குறித்த சிசு தொடர்பில் பொலிஸாருக்கு தெரியப்படுத்தியதையடுத்து, சம்பவ இடத்துக்கு விரைந்த உப்புவெளி பொலிஸார் கைப்பற்றப்பட்ட சிசுவை திருகோணமலை பொது வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளனர்.
இருந்த போதிலும் குறித்த சிசு ஆண் சிசு எனவும் யாருடைய சிசு பற்றிய விபரங்கள் தெரியாத பட்சத்தில் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் உப்புவெளி பொலிஸார் தெரிவித்தனர்.
அப்துல்சலாம் யாசீம்