குரோஷியாவில் இதயம் போல காணப்படும் தீவின் ஒரு பகுதி விற்பனை செய்யப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதய வடிவில் காணப்படும் அட்ரியாடிக் தீவு சுற்றுலாப் பயணிகளால் காதல் தீவு என அழைக்கப்படுகிறது. தீவு மற்றும் அதனை சுற்றி ஆண்டுக்கு ஒரு மில்லியனுக்கும் அதிகமாக புகைப்படங்கள் எடுக்கப்படுவதாக கூறப்படுகிறது. தீவில் ஹோட்டல்கள், வில்லாக்கள் இல்லை என்றாலும், சுற்றுலாப் பயணிகள் வந்த வண்ணம் உள்ளனர்.
ஒரு இலட்சத்து 42,000 சதுர மீட்டர் பரப்பளவு கொண்ட தீவில், 40,000 சதுரமீற்றர் வரை 13 மில்லியன் யூரோக்களுக்கு விற்பனை செய்ய இருப்பதாக அதன் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.