இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் 2023-2025 காலப்பகுதிக்கான நிர்வாகக்குழுவைத் தெரிவு செய்வதற்காக நடைபெறவுள்ள தேர்தலுக்கான வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன.
2022 ஆம் ஆண்டு நவம்பர் 23 ஆம் திகதி ஸ்ரீலங்கா கிரிக்கட் நிர்வாகக் குழுவினால் எடுக்கப்பட்ட முடிவின்படி, பின்வரும் உறுப்பினர்களை உள்ளடக்கிய SLC இன் தேர்தல் குழு நியமிக்கப்பட்டது.
அந்த வகையில், நீதிபதி திருமதி மாலானி குணரத்ன, ஓய்வுபெற்ற மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி, ஷிரோமி பெரேரா, உயர் நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதிபதி. சுனில் சிறிசேன, இலங்கை நிர்வாக சேவையின் ஓய்வுபெற்ற மூத்த அரச அதிகாரி ஆகியோர் நியமிக்கப்பட்டனர்.
இந்நிலையில் குறித்த தேர்தலுக்குான வேட்புமனு தாக்கல் இன்று காலை 9.30 க்கு தொடங்கி மாலை 3.30க்கு நிறைவடைந்த நிலையில், 2023 மே 20ஆம் திகதி தேர்தல் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.