பத்தரமுல்லவில் உள்ள குடிவரவு திணைக்களத்துக்கு வெளிநாட்டு கடவுச்சீட்டைப் பெற செல்பவர்களுக்கு உதவுவதாக கூறி ஆயிரக்கணக்கான ரூபா பணத்தைப் பெற்று போலி ஆவணங்களை தயாரித்தார்கள் எனக் கூறப்படும் நால்வர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டதாக தலங்கம பொலிஸார் தெரிவித்தனர்.
போலி ஆவணங்களை தயாரித்து, பலாத்காரமாக பணம் பெற்றுக் கொண்டமை மற்றும் வெளிநாட்டு கடவுச்சீட்டுகளை வைத்திருந்தமை போன்ற சந்தேகத்தின் பேரிலேயே இவர்கள் நால்வரும் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் மாலம்பே, வத்தளை மற்றும் கொழும்பு 11 பிரதேசங்களை சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் தொடர்பில் தலங்கம பொலிஸ் அதிகாரிகள் குழு மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.