இந்தோனேசியாவில் இலங்கையை சேர்ந்த கோடீஸ்வரர் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளமை குறித்த விசாரணைகளிற்காக அந்தநாட்டிற்கு செல்வதற்கு சிஐடியினர் தயாராக உள்ளனர் என பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
இலங்கையை சேர்ந்த கோடீஸ்வரர் ஒனேஸ் சுபசிங்கவின் மரணம்தொடர்பில் விசாரணைகளை முன்னெடுப்பதற்காக சிஐடியினர் இந்தோனேசியா செல்ல தயாராகவுள்ளனர்.
ஒனேஸ் சுபசிங்கவின் மரணம் குறித்து விசாரணைகளை மேற்கொள்ளுமாறு பொலிஸ்மா அதிபர் உத்தரவிட்டுள்ளார் என பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
பொலிஸ்மா அதிபருக்கு முறைப்பாடுகள் கிடைத்துள்ளதை தொடர்ந்தே விசாரணைகள் ஆரம்பமாகியுள்ளன.
இந்தோனேசியாவின் ஜகார்த்தாவில் ஆடம்பர தொடர்மாடியொன்றில் இலங்கையை சேர்ந்த கோடீஸ்வரர் ஒனேஸ் சுபசிங்க ( 45) சடலமாக மீட்கப்பட்டார்.
இதேவேளை சுபசிங்கவின் கொலை இலங்கையில் திட்டமிடப்பட்டு இந்தோனேசியாவில் நிறைவேற்றப்பட்டதாகவும் உயிரிழந்தவரின் மனைவி மற்றும் அவரது நண்பி இதன் பின்னணியில் உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.