பணிப்புறக்கணிப்பு காரணமாக இன்று (13) சேவையில் இருந்த பல ரயில் பயணங்கள் முன்னறிவித்தல் இன்றி இரத்து செய்யப்படுவதாக இலங்கை ரயில்வே தெரிவித்துள்ளது.
புகையிரத இயந்திர சாரதிகள் சங்கத்தினால் இந்த பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதனால் ரயிலில் பயணிக்கும் பயணிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.