திறைசேரியிடம் போதிய நிதியின்மையால் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கு பணத்தை வழங்குவது மிகவும் சிரமமான விடயமென அரசாங்கத்தின் சிரேஷ்ட பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
தற்போது சுகாதாரம் உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் நிலவும் நிதி நெருக்கடி, இதில் பாரிய தாக்கத்தை செலுத்தியுள்ளதாக குறித்த பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.
எவ்வாறாயினும், இயலுமான அனைத்து சந்தர்ப்பங்களிலும் தேவைக்கேற்றவாறு நிதியை விடுவிப்பதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படுமென அவர் தெரிவித்துள்ளார்.