நாட்டின் அபிவிருத்திக்கு தேவையான சகல உதவிகளையும் வழங்க தயாராக உள்ளதாக இலங்கைக்கான நியூசிலாந்து உயர்ஸ்தானிகர் மைக்கல் எக்ல்டன் தெரிவித்துள்ளார்.
நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்கவுடன் இடம்பெற்ற சந்திப்பின் போது, அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இந்த சந்திப்பின்போது, நாட்டின் பொருளாரத்தை சீரான நிலைக்கு கொண்டு வரும் நோக்கில் மறுசீரமைப்பு தொடர்பில் கலந்துரையாடப்பட்டதாக இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.