கத்தாரில் நடைபெற்ற தமிழர் திருவிழாவில் இலங்கை ஊடகவியலாளர்கள் பொன்னாடை போத்தி கௌரவிப்பு
கத்தார் வெளிநாடு வாழ் தமிழ் இந்திய சங்கம் நடத்திய தமிழர் பொங்கல் திருவிழா கடந்த வெள்ளிக்கிழமை மாலை 3 மணி அளவில் கத்தார் கிரிக்கெட் ஸ்டேடியம் ஏசியன் டவுனில் நடைபெற்றது.
விழாவில் சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு தி.மு.க மாணவரணி தலைவர் வழக்கறிஞர் R. ராஜீவ்காந்தி அவர்கள் கலந்து கொண்டார்.
இந்த நிகழ்வில் கத்தார் மண்ணில் சிறப்பாக ஊடகப்பணியை மெற்கொண்டு வருகின்ற ஸ்கை தமிழ் ஊடக வலையமைப்பின் பணிப்பாளர் ஜே.எம்.பாஸித் மற்றும் அதன் முகாமையாளர் அஸ்வர் ரிஸ்வி ஆகியோருக்கு தி.மு.க மாணவரணி தலைவர் வழக்கறிஞர் R. ராஜீவ்காந்தி அவர்களால் பொன்னாடை போத்தி விருது வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
குறித்த நிகழ்வானது தமிழர் மரபுகள், பாரம்பரிய பரதநாட்டியம், கவியரங்கம், பறை இசை மற்றும் சிலம்பத்தோடு அனைத்தையும் அழகாக ஒருங்கிணைத்து தமிழையும், தமிழரின் அடையாளத்தையும் கத்தாரில் பறைசாற்றியது என்பது குறிப்பிடத்தக்கது.