8ம் வகுப்பிலிருந்து செயற்கை நுண்ணறிவு (AI) பாடத்தைச் சேர்க்கும் அதே வேளையில், அனைத்து வகுப்புகளின் பாடத்திட்டத்தையும் 6 முதல் 13வரை புதுப்பிக்க கல்வி அமைச்சு திட்டமிட்டுள்ளது.
பாடத்திட்டத்தின் புதுப்பிப்பு எதிர்வரும் 2024ஆம் ஆண்டு முதல் நடைமுறைக்கு வருமென கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.
செயற்கை நுண்ணறிவு (AI) பாடம் விருப்பப்பாடமாக சேர்க்கப்பட்டுள்ளதுடன், மாணவர்கள் அந்த பாடத்தை தகவல் தொழில்நுட்ப (IT) பாடங்களுடன் படிக்கும் வாய்ப்பைப் பெறுவார்கள்.
கல்வியை டிஜிட்டல் மயமாக்கும் கொள்கைக்கு அமையவே குறித்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், இதற்காக இரண்டு வாரங்களில் அமைச்சரவை அமைச்சர்களின் ஒப்புதல் பெறப்பட உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.