இலங்கையை சேர்ந்த பிரபல தொழிலதிபர் கமில் ஹுசைன் நேற்று (5) கென்யாவில் காலமானார். கமில் ஹுசைன் கொழும்பு 04 இல் அமைந்துள்ள Synergy Ventures Pvt. லிமிடெட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனராக பதவி வகித்துவந்தார்.
அவர் நியூமோனியா காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் கென்யாவில் காலமானார்.
கமிலின் மறைவு குறித்து தனது இரங்கல் அறிக்கையை வெளியிட்ட வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி, கமில் ஹுசைன் உண்மையான நண்பர், தேசபக்தர் மற்றும் சமூக ஆர்வலர் என்று குறிப்பிட்டுள்ளார்.