Our Feeds


Thursday, February 9, 2023

ShortNews Admin

எகிப்து வரை உணரப்பட்ட நிலநடுக்கம் : விஞ்ஞானிகள் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!



துருக்கி மற்றும் சிரியா நாடுகளின் எல்லையில் கடந்த திங்கட்கிழமை அதிகாலை பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. 


இந்நிலநடுக்கம் பலரும் உறங்கி கொண்டிருந்த நேரத்தில் ஏற்பட்டதால் அதிக அளவில் உயிரிழப்பை ஏற்படுத்தியுள்ளது. 


துருக்கி காசியான்டெப் மாகாணத்தில் உள்ள நூர்டகிக்கு கிழக்கே 23 கிலோமீட்டர் (14.2 மைல்) தொலைவில் 24.1 கிலோமீட்டர் (14.9 மைல்) ஆழத்தில் நிலநடுக்கம் தாக்கியது.


மேலும் 100 ஆண்டுகளுக்கு பிறகு இப்பகுதியை தாக்கிய சக்தி வாய்ந்த நிலநடுக்கம் இதுவாகும். 


ரிக்டர் அளவில் 7.8 ஆக பதிவான இந்த நிலநடுக்கம் எதிரொலியாக துருக்கிஇ சிரியாவின் எல்லை நகரங்களில் கட்டிடங்கள் குலுங்கின. இந்த நிலநடுக்கம் இஸ்ரேல்இ லெபனான் போன்ற அண்டை நாடுகளிலும் உணரப்பட்டுள்ளது. 


இந்த நிலநடுக்க பாதிப்பால் இறந்தவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மொத்தம் 16 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர் என அதிகாரிகள் மற்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். ஆனால் பலி எண்ணிக்கை மேலும் உயரும் என அஞ்சப்படுகிறது.


இதனையடுத்து, பேரிடர் பகுதிகளுக்கு துருக்கி ஜனாதிபதி ரீசெப் தயீப் எர்டோகன் சென்று பார்வையிட்டுள்ளார். தொடர்ந்து, மீட்பு பணிகள் நடந்து வருகின்றன. 


இந்நிலையில், நிலநடுக்க அறிவியலாளர்களில் ஒருவரான இத்தாலிய நாட்டு விஞ்ஞானியான பேராசிரியர் கார்லோ டாக்லியோனி கூறும்போது, டெக்டானிக் தட்டு பகுதிகளில் துருக்கி அமைந்துள்ளது. இந்த தட்டுகளிடையே ஏற்பட்ட மோதலால், துருக்கி நாடு 5 முதல் 6 மீட்டர் வரை நகர்ந்து இருக்க கூடும் என கூறியுள்ளார்.


இது அண்டை நாடான சிரியாவுடனான ஒப்பீட்டு அளவில் மதிப்பிடப்பட்டு உள்ளது. அராபிக்கா தட்டுடன் தென்மேற்கு பகுதியை நோக்கி அனடோலியன் தட்டு நகர்ந்ததில் இந்த பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால், லெபனான் தலைநகர் பெய்ரூட், சிரியா தலைநகர் டமாஸ்கஸ் மற்றும் எகிப்து நாட்டின் கெய்ரோ நகர் வரை நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது.


இதில், குறிப்பிடும்படியாக துருக்கியின் நிலப்பரப்புக்கு கீழே ஒரு தட்டு மேற்கு நோக்கியும் மற்றொரு தட்டு கிழக்கு நோக்கியும் நகர்ந்துள்ளன. இதில் ஏற்பட்ட அதிர்வில் மிக பெரிய பாதிப்புகளை ஏற்படுத்த கூடிய அளவிலான நிலநடுக்கம் உருவாகி உள்ளது.


அனடோலியன், அராபிக்காஇ யுரேசியன் மற்றும் ஆப்ரிக்கன் ஆகிய 4 தட்டுகள் தொடர்ச்சியாக ஒன்றுடன் ஒன்று மோதியதில் ரிக்டர் அளவுகோலில் 7.8 மற்றும் 7.2 என்ற அளவிலான இரு நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளன என்றும் டாக்லியோனி கூறியுள்ளார்.


இதனாலேயே, பல கட்டிடங்கள் சீட்டு கட்டுபோல் சரிந்து விழுந்துள்ளன. அதுபற்றிய வீடியோவும் வெளிவந்து பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.


துருக்கியில் 25 ஆண்டுகளில் இல்லாத வகையில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கம் என கூறப்படுகிறது. கடந்த 1999-ம் ஆண்டில் ஆகஸ்டில் ரிக்டரில் 7.6 அளவிலான நிலநடுக்கத்திற்கு 18 ஆயிரம் பேர் உயிரிழந்தனர்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »