இந்த ஆண்டு 75ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு வெளியிடப்பட்ட சுதந்திர முத்திரையை முத்திரைப் பணியக அதிகாரிகள் தனது அனுமதியோ அல்லது தெரியாமலோ மாற்றியுள்ளதாக முத்திரையின் வடிவமைப்பாளரான கலைஞர் சனத் ரோஹன விக்கிரமசிங்க குற்றம் சுமத்தியுள்ளார்.
தேசியக் கொடியையும் சுதந்திர சதுக்கத்தையும் வெள்ளைப் பின்னணியில் வரைந்த முத்திரை, முத்திரைப் பணியக அதிகாரிகளின் வேண்டுகோளுக்கு இணங்க பழுப்பு நிற பின்னணியில் மாற்றப்பட்டதாகவும், இது வேண்டுமென்றே தனது வடிவமைப்பை சிதைத்ததாகவும் சனத் ரோஹன விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
முத்திரையை வெளியிடுவதற்கு முன்னர் அரசாங்க அச்சகத்துக்குச் சென்று அதன் நிலையை அவதானிக்க அனுமதிக்குமாறு கோரிய போதும், அச்சகத்துக்குள் நுழைய விடாமல் அதிகாரிகள் தடுத்ததாக அவர் கூறினார்.
மேலும், பாரம்பரியமாக முத்திரையை உருவாக்கும் கலைஞரே அது தொடர்பான முதல் நாள் அட்டையையும் உருவாக்குகிறார், ஆனால் இம்முறை அது வேறொருவரைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ளது. அதன் காரணமாக இது தொடர்பில் எடுக்கக்கூடிய அதிகபட்ச சட்டக் கட்டுப்பாடுகள் எடுக்கப்படும் என்றார்.
மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில், தேசிய கீதத்தை மாற்றியமையால் துக்கத்தினால் உயிரையே இழந்த ஆனந்த சமரக்கோன் போன்ற பெறுமதியான வளங்களை இழந்த வரலாற்றைக் கொண்ட நாட்டில் சுதந்திர தின முத்திரை வடிவமைப்பாளர் சுதந்திர தினத்தை ரசிக்கும் வாய்ப்பை இழந்துள்ளார் என்றார்.