உள்ளூராட்சி மன்றத் தேர்தலை திட்டமிட்டபடி நடத்த வேண்டும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளதால், தற்போது தேர்தலை நடத்துவதை யாராலும் தடுக்க முடியாது என வழக்குத் தாக்கல் செய்த பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.
இது தொடர்பில் நீதிமன்றில் விசேட அறிக்கையொன்றை விடுத்துள்ள அவர், இது மூன்று நீதிபதிகளின் ஏகோபித்த தீர்மானம் எனவும் தேர்தலை தடுக்கும் வகையில் செயற்படும் சகலருக்கும் எதிராக நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.