இக்கட்டான காலங்களில் நாட்டை விட்டு வெளியேறும் தொழில் வல்லுநர்கள் எவரேனும் இருந்தால் அவர்கள் மீண்டும் இலங்கைக்கு திரும்பி வர வேண்டாம் என்பதே என்னுடைய கருத்து என டயனா கமகே தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் சிம்மாசன உரையின் பின்னர் பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
தற்போது நாடு மிகவும் கடினமான சூழ்நிலையில் இருப்பதாகவும், தொழில் வல்லுநர்களின் சேவை நாட்டுக்கு மிகவும் இன்றியமையாத தருணத்திற்கு வந்துள்ளதாகவும் அவர் கூறினார்.
ஆகவே, இவ்வாறான இக்கட்டான காலத்தில் எம்மை விட்டுச் சென்ற வைத்தியர்கள் போன்ற தொழில் வல்லுநர்களின் தேவை இந்த நாட்டிற்கு தேவையில்லை என்றும் குறிப்பிட்டார்