சுதந்திர தினத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்றும் (04) ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் ஒன்றியத்தின் அழைப்பாளர் வசந்த முதலிகே தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், கொள்ளுப்பிட்டி, கொம்பனித்தெரு மற்றும் கோட்டை பொலிஸ் எல்லைக்குட்பட்ட பல வீதிகளுக்குள் ஆர்ப்பாட்டக்காரர்கள் நுழைவதைத் தடுக்கும் வகையில் நீதிமன்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
துமந்த நாகமுவ, கல்வெவ சிறிதம்ம தேரர், ஜோசப் ஸ்டாலின் உள்ளிட்டோருக்கு கோட்டை நீதவான் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இன்று (04) காலை நடைபெறவுள்ள சுதந்திர தின நிகழ்வின் பாதுகாப்பை மையப்படுத்தி இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவா தெரிவித்தார்.