பிரபல வர்த்தகர் தினேஸ்சாப்டர் சயனைட் செலுத்தப்பட்டு
கொல்லப்பட்டார் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.தினேஸ் சாப்டரின் மரணம் தொடர்பான விசாரணைகள் அளுத்கடை நீதவான் நீதிமன்றில் இடம்பெற்றவேளை இந்த விபரம் வெளியாகியுள்ளது.
சிஐடியினர் மேலதிக நீதவான் ரஜீந்திரஜெயசூரிய முன்னிலையில் இந்த விடயங்களை சமர்;ப்பித்துள்ளனர்.
கழுத்துநெரிக்கப்பட்டதால் ஏற்பட்ட காயங்கள் உயிராபத்தை ஏற்படுத்தக்கூடியவை இல்லை என சிஐடியினர் தெரிவித்துள்ளனர்.
தினேஸ் சாப்டரின் ஐபோன் மற்றும் ஐபாட்டினை தடயவியல் சோதனைக்கு உட்படுத்தியவேளை பல முக்கிய விடயங்கள் தெரியவந்துள்ளன என சிஐடியினர் தெரிவித்துள்ளனர்.
தினேஸ்சாப்டர் தனது மனைவிக்கும் மனைவியின் குடும்பத்தினருக்கும் எழுதிய பல ஆவணங்கள் மீட்கப்பட்டுள்ளன