ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் மயந்த திஸாநாயக்க, பாராளுமன்ற நிதிக் குழுவின் தலைவர் பதவியில் இருந்து விலகத் தீர்மானித்துள்ளார்.
அந்த தீர்மானம் தொடர்பில் மயந்த திஸாநாயக்க, ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டாரவுக்கு அறிவித்துள்ளார்.
சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவுக்கு எழுத்து மூலம் அறிவித்ததன் பின்னர், நிதிக்குழுவின் தலைவர் பதவியில் இருந்து மயந்த திசாநாயக்க உத்தியோகபூர்வமாக விலகவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.