துருக்கியில் நிலநடுக்கத்தால் இடிந்து விழுந்த கட்டிடங்களின் கட்டுமானங்களுடன் தொடர்புடையவர்களை பொலிஸார் கைது செய்யும் நடவடிக்கையை ஆரம்பித்துள்ளனர்.
இதுவரை கட்டிட ஒப்பந்ததாரர்கள் உள்பட 12 பேர் கைது செய்யப்பட்டு பொலிஸார் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
மேலும் 113 பேருக்கு பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
134 பேரிடம் விசாரணை நடந்து வருகிறது. இந்த விவகாரத்தில் கைது நடவடிக்கை அதிகரிக்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
துருக்கியில் பல ஆண்டுகளாகவே, உள்ளூர் ஊழல் மற்றும் அரசாங்க கொள்கைகள் காரணமாக நாட்டில் உள்ள பல புதிய கட்டிடங்கள் பாதுகாப்பற்றதாக இருப்பதாக நிபுணர்கள் எச்சரித்து வந்தது குறிப்பிடத்தக்கது.