பாராளுமன்ற சந்தியில் உள்ள தியத உயனவுக்கு அருகில் தற்போது போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
சுதந்திர தினத்தை கொண்டாடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் பலர் இந்த போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.
போராட்டக்காரர்கள் வீதியோரத்தில் போராட்டம் நடத்தி வருவதால், அருகில் உள்ள பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை, கமற்றுமொரு மாணவர் ஒன்றியம் ஏற்பாடு செய்திருந்த போராட்டம் பிற்பகல் ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.