மார்ச் 31 ஆம் திகதிக்கு முன்னர் சர்வதேச நாணய நிதியத்தின் கடனைப் பெற்றுக் கொள்ளாவிட்டால் நாட்டின் பொருளாதாரத்தின் மோசமான நிலைமை மேலும் மோசமடையும் என வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
அல் ஜசீரா தொலைக்காட்சியுடன் இடம்பெற்ற கலந்துரையாடலில் கலந்து கொண்ட போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.