சுமார் 4 அடி உயரம் கொண்ட இரண்டு யானைத் தந்தங்களை 50 இலட்சம் ரூபாவுக்கு விற்பனை செய்ய முயற்சித்த ஒருவரைக் கைது செய்துள்ளதாக பாணந்துறை வலான மத்திய ஊழல் தடுப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.
பாணந்துறை வலான மத்திய ஊழல் ஒழிப்பு பிரிவின் பணிப்பாளர் உதவி பொலிஸ் அத்தியட்சகருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் மாத்தறை பிரதேசத்தில் நபர் ஒருவர் ஒரு ஜோடி யானை தந்தங்களை விற்பனை செய்வதற்கு கொள்வனவு செய்பவரை தேடுவதாக கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டு சந்தேக நபரைக் கைது செய்ததுடன் யானைத் தந்தங்களையும் கைபபற்றினர்.
பொலிஸ் பரிசோதகர் தலைமையிலான குழுவினர் சில நாட்களுக்கு முன்னர் மாத்தறைக்கு சென்று, யானை தந்தங்களை வைத்திருந்த நபரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, அவரை மாத்தறை பிடபெத்தர பிரதேசத்தில் உள்ள விஹாரைக்கு அருகில் வைத்து கைது செய்துள்ளனர்.