Our Feeds


Friday, February 3, 2023

SHAHNI RAMEES

ஆஷூ மாரசிங்கவுக்கு மீண்டும் ஜனாதிபதி ஆலோசகர் பதவி...?

 

பாராளுமன்ற விவகாரங்களுக்கான ஜனாதிபதி ஆலோசகர் பதவியில் இருந்து விலகிய பேராசிரியர் ஆஷு மாரசிங்கவை மீண்டும் சேவையில் அமர்த்துவதற்கு ஜனாதிபதி நடவடிக்கை எடுத்துள்ளார்.

சமீபத்தில், ஆஷு மாரசிங்கவின் காதலியான ஆதர்ஷா கரதனாவின் செல்ல நாய் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதாகக் குற்றம் சாட்டி, சமூக ஊடகங்களில் வீடியோ ஒன்று பரவி வந்த நிலையில் பேராசிரியர் ஆசு மாரசிங்க தனது பதவியை இராஜினாமா செய்தார்.

இதேவேளை, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர, ஆதர்ஷ கரந்தனவுடன் இணைந்து ஊடகவியலாளர் சந்திப்பொன்றை மேற்கொண்டதுடன், ஆஷு மாரசிங்க மிருகத் துஷ்பிரயோகம் செய்ததாக குற்றம் சுமத்தியிருந்தார். ஹிருணிகா பிரேமச்சந்திரவிடம் 500 மில்லியன் ரூபாவும், ஆதர்ஷ கரதனவிடம் ஒரு பில்லியன் ரூபாவும் கோரி இடைக்கால மேன்முறையீட்டை ஆஷு மாரசிங்க தாக்கல் செய்துள்ளார்.


இதேவேளை, கடந்த 31ஆம் திகதி, பேராசிரியர் ஆஷு மாரசிங்கவை மீண்டும் அதே பதவியில் அமர்த்துவதற்கு ஜனாதிபதி நடவடிக்கை எடுத்திருந்தார்.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »