இலங்கையில் சமூக அமைதியின்மை நிலவிய காலங்களில் அரசாங்கம் அரசமைப்பு நடைமுறைகளை பின்பற்றியதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
ஐ.நா அமர்விற்கான செய்தியில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இலங்கையின் மனித நிலவரம் குறித்து ஆராயப்படும் காலப்பகுதியில் இலங்கை உயிர்த்த ஞாயிறு தாக்குதல் கொவிட் பெருந்தொற்று உக்ரைன் போரின் எதிர்வினைவுகள் போன்ற பொருளாதார சமூக சவால்களை எதிர்கொண்டது என வெளிவிவகார அமைச்சர் முன்கூட்டியே பதிவு செய்யப்பட்ட வீடியோவில் தெரிவித்துள்ளார்.
சமூக அமைதியின்மை நிலவிய காலத்தில் இலங்கை அரசமைப்பு வழிமுறைகளை பின்பற்றியது, அரசாங்கத்தின் மீது பொதுமக்களின் நம்பிக்கையை அதிகரித்தது, நாடாளுமன்றத்தை வலுப்படுத்தியது என வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார்.