அனைத்து அரசாங்க நிறுவனங்களிலும் அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே வாகனங்களை பயன்படுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
திறைசேரி செயலாளர் சிறிவர்தன இது தொடர்பில் அனைத்து அரசாங்க நிறுவனங்களின் பிரதானிகளுக்கும் அறிவித்துள்ளார்.
கூடுமானவரை ஒன்லைன் முறைகளை பயன்படுத்தி கூட்டங்கள் மற்றும் கலந்துரையாடல்களை நடத்துவதன் மூலம் போக்குவரத்து தேவைகள் ஏற்படுவதை மட்டுப்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் இது தொடர்பான அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.