அரசியலமைப்பின் 13வது திருத்தத்திற்கு எதிராக ஸ்ரீ
ஜயவர்தனபுர கோட்டே பாராளுமன்றத்திற்கு அருகில் பௌத்த மதகுருமார்கள் குழு ஒன்று எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றினை முன்னெடுத்து வருகின்றது.ஒன்பதாவது பாராளுமன்றத்தின் நான்காவது அமர்வை சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்து வைத்து ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உரையாற்றும் பாராளுமன்றத்திற்கு செல்லும் பாதையை பொலிஸார் மறித்ததையடுத்து அங்கு பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்திருந்தார்.
இதன்போது அங்கு சற்று பதற்ற நிலைமை உருவாகியிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.