சுமார் 20 வருடங்களாக துருக்கியில் வசித்து வந்த கலகெதரவை சேர்ந்த இலங்கை பிரஜை ஒருவர் உயிரிழந்துள்ளதாக துருக்கிக்கான இலங்கை தூதுவர் தெரிவித்துள்ளார்.
அவர் துருக்கியர் ஒருவரை திருமணம் செய்து, அந்த நாட்டில் வசித்து வந்தார்.
உயிரிழந்தவரின் சடலம் அவரது மகளால் அடையாளம் காணப்பட்டுள்ளதாக இலங்கை தூதுவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இந்த வார தொடக்கத்தில் இரு நாடுகளையும் உலுக்கிய பேரழிவு நிலநடுக்கத்தைத் தொடர்ந்து துருக்கி மற்றும் சிரியாவில் பலியானவர்களின் எண்ணிக்கை 28,000 க்கும் அதிகமாக உயர்ந்துள்ளது.