(யு.எல். முஸம்மில்)
உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு பின்னர் 2019ம் ஆண்டு மே மாதம் மினுவங்கொட மற்றும் வடமேல் மாகாணங்களில் இனவாதிகளால் திட்டமிடப்பட்டு முன்னெடுக்கப்பட்ட இனவாத தாக்குதலில் தீக்கிரையான கொடம்பிடிய ஜமாலியா அரபுக்கல்லூரியை மூன்றரை வருடங்களுக்கு பின்னர் மீளவும் திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
குறித்த அரபுக் கல்லூரியை மீள திறக்கும் நிகழ்வு எதிர்வரும் 13ஆம் திகதி திங்கட்கிழமை அதிபர் அஷ்ஷெய்க் இர்ஸான் (ஜமாலி) தலைமையில் நடைபெறவுள்ளது.
திறப்பு விழாவில் அஷ்ஷெய்க் அம்ஹர் ஹகம்தீன், அஷ்ஷெய்க் அப்துல் அஸீஸ் (ஹிழ்ரி) ஆகியோர் விஷேட சொற்பொழிவாற்றவுள்ளனர். – Vidivelli