நாளை (15) தபால் வாக்குச்சீட்டுகளை விநியோகிக்க முடியாது
என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் எம்.பி சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.தேர்தல்கள் ஆணைக்குழுவுடன் இன்று (14) இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
கேள்வி – வாக்களிப்பு தொடர்பில் உறுதியில்லையா?
“தபால் வாக்குகள் விநியோகிக்கப்படும் என்று எங்களுக்கு முன்பே அறிவிக்கப்பட்டது. ஆனால் இன்று நடந்த இந்த விவாதத்தில் நாளை இந்த தபால் வாக்குகளை விநியோகிக்க முடியாது என்று தெரிவித்தனர்.”
கேள்வி – அப்படியென்றால் மற்றொரு திகதி வழங்கப்படவில்லை என்று அர்த்தமா?
“அதை தேர்தல் ஆணைக்குழு முடிவு செய்யும். இது சம்பந்தமாக தேவையான பணம் இல்லாமல் செய்ய முடியாது என்று அரசு பத்திரிக்கையில் கூறப்பட்டதாக தெளிவாக விளக்கப்பட்டது.”
2023 உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான தபால்மூல வாக்களிப்பதற்காக பெப்ரவரி 22, 23 மற்றும் 24ஆம் திகதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.