Our Feeds


Tuesday, February 14, 2023

News Editor

மீண்டும் நெருக்கடியை உருவாக்க சதி


 மார்ச் மாதம் 8ஆம் 9ஆம் திகதிகளுக்கு முன்னர் மின் வெட்டு மற்றும் எரிபொருள் வரிசைகளை அதிகரித்து, நாட்டில் பொருளாதார நெருக்கடியை ஏற்படுத்த சில குழுக்கள் சதி செய்து வருவதாக மின்சக்தி மற்றும் வலுச்சக்தி அமைச்சர்  காஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.

சில ஆணைக்குழுக்களில் உள்ள சிலரினால் அந்த அரசியல் பிரசாரங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவித்த அவர், மேற்குறிப்பிட்ட சதி முயற்சிகள் குறித்து தமக்கு தகவல் கிடைத்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.

கடந்த வருடம் இடம்பெற்ற உயர்தரப் பரீட்சை காலப்பகுதியில் ஏழரை மணி நேரம் மின்சாரம் துண்டிக்கப்பட்டதை சிலர் மறந்துவிட்டதாகவும் 2,3 நாட்களுக்கு வரிசைகளில் காத்திருந்தமையையும் நினைவூட்டினார். 

இலங்கை மின்சார சபை மற்றும் பெற்றோலியம்  கூட்டுத்தாபனத்தின் செலவினங்களும் நிர்வகிக்கப்பட வேண்டும் என்றும் அதற்காகவே மறுசீரமைப்பு வேலைத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்ட அமைச்சர், அதற்கும் சிலர் எதிர்ப்பு தெரிவித்து வருவதாக தெரிவித்தார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »