பாதுகாப்பு காரணங்களுக்காக கொழும்பில் உள்ள இந்திய விசா மையம் மறு அறிவித்தல் வரை மூடப்பட்டுள்ளதாக இந்திய உயர்ஸ்தானிகராலயம் அறிவித்துள்ளது.
அனைத்து விண்ணப்பதாரர்களும் ஐ.வி.எஸ் பிரைவேட் லிமிடெட் உடனான தங்கள் நேர ஒதுக்கீடுகளை மீள்பதியுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
ஏதேனும் அவசர தூதரக / விசா விடயங்களுக்கு , உயர் ஸ்தானிகராலயத்தை தொலைபேசியில் தொடர்பு கொள்ளுமாறு இந்திய உயர்ஸ்தானிகராலயம் விசேட அறிக்கையில் கேட்டுக்கொண்டுள்ளது.
தொலைபேசி இலக்கங்கள்- 011 232 6921 011-2421605,011-242 2788,011-2327587