கண்டியில் புகையிரத குடியிருப்புக்குள் நுழைய முயன்ற நபர் ஒருவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் இரண்டு புகையிரத கட்டுப்பாட்டாளர்களை கண்டி பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கடுகன்னாவ பிரதேசத்தைச் சேர்ந்த உயிரிழந்த நபர் கடந்த 13 ஆம் திகதி புகையிரத உத்தியோகபூர்வ இல்லத்திற்குள் நுழைய முற்பட்ட போது, வீட்டில் இருந்த இரு யுவதிகள் பயந்து அலறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சத்தம் கேட்டு வீட்டுக்குள் நுழையந்த புகையிரத கட்டுப்பாட்டாளர்கள் இருவர் தாக்குதல் மேற்கொண்டதில் குறித்த நபர் கீழே விழுந்து காயங்குக்கு உள்ளாகியதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் குறித்த புகையிரத கட்டுப்பாட்டாளர்கள் இருவரையும் பொலிஸார் கைது செய்யப்பட்டுள்ளனர்.
உயிரிழந்தவரை தாங்கள் தாக்கவில்லை என்றும், அவர் குடியிருப்பின் மேல் மாடியில் இருந்து விழுந்து காயமடைந்ததாகவும் சந்தேக நபர்கள் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் பொலிஸ் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.