ராஜபக்க்ஷர்களின் டொலர்கள் உகண்டாவுக்கு விமானத்தில்
கொண்டு செல்லப்பட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டு பொய்யானது என பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்க்ஷ தெரிவித்துள்ளார்.திருடப்பட்ட பணம் அனைத்தும் மீண்டும் தமது ஆட்சியின்போது மீண்டும் கொண்டு வரப்படும் என மக்கள் விடுதலை முன்னணி தெரிவித்து வருகிறது.
நாட்டில் உள்ள எவராவது ஒருவர் இந்தக் குற்றச்சாட்டை நிரூபித்து டொலர்களை இலங்கைக்கு கொண்டு வந்தால் அந்த பணத்தில் நாட்டின் அனைத்து கடன்களையும் தீர்க்க முடியும் என பொதுக் கூட்டம் ஒன்றில் உரையாற்றிய நாமல் ராஜபக்க்ஷ மேலும் தெரிவித்துள்ளார்.