Our Feeds


Monday, February 13, 2023

ShortNews Admin

கல்முனை முஸ்லிம் பிரிவு கோட்டக் கல்வி அதிகாரியாக நஸ்மியா நியமனம்!



மாளிகைக்காடு நிருபர் 


கல்முனை கல்வி வலயத்தின் முஸ்லிம் பிரிவு கோட்டக்கல்வி அதிகாரியாக ஏ.பி. நஸ்மியா சனூஸ் கிழக்கு மாகாண கல்வியமைச்சின் செயலாளர் எச்.ஈ.எம்.டப்ளியு.ஜி. திஸாநாயக்கவினால் கடந்தவாரம் நியமிக்கப்பட்ட நிலையில், அவர் இன்று (13) தமது கடமைகளை பெறுப்பேற்று கொண்டார்.


கல்முனை கல்வி வலயத்தின் இஸ்லாம் பாட உதவிக்கல்வி பணிப்பாளராக கடமையாற்றிய நிலையில், இவருக்கு இந்த நியமனம் கிடைத்துள்ளது.


கல்முனை வலயக்கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.சஹதுல் நஜீம், வலயக்கல்வி அலுவலக கணக்காளர் வை. ஹபிபுல்லாஹ், பிரதிக்கல்வி பணிப்பாளர்கள், உதவிக்கல்வி பணிப்பாளர்கள், சாய்ந்தமருது கோட்டக்கல்வி அதிகாரி எம்.என்.எம். மலிக் ஆகியோர் இதன்போது சமூகமளித்திருந்தனர்.


கல்முனை கல்வி வலயத்தின் இஸ்லாம் பாட உதவிக்கல்வி பணிப்பாளராக கடந்த பல வருடங்களாக கடமையாற்றி வரும் இலங்கை கல்வி நிர்வாக சேவை அதிகாரியான நஸ்மியா சனூஸ், அப்பதவிக்கு மேலதிகமாகவே இந்த கோட்டக்கல்வி அதிகாரி பதவியையும் பெற்றுள்ளார்.


கடந்த காலங்களில் நஸ்மியா திறமையாக செயற்பட்ட அதிகாரி என்பதால், அவர் தன்னுடைய கோட்டத்தை முன்மாதிரியாக உருவாக்குவதற்கு அர்ப்பணிப்புடன் செயலாற்றுவார் என்ற நம்பிக்கை இருப்பதாக – இங்கு ஆசியுரை நிகழ்த்திய ல்முனை வலயக்கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.சஹதுல் நஜீம் இதன்போது உரையாற்றுகையில் தெரிவித்தார்.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »