வெல்லம்பிட்டியிலுள்ள வீடொன்றில் போலி இலக்கத் தகடு பொருத்தப்பட்ட கார் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக மிரிஹான பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்தனர்.
குறித்த காரின் இலக்கம் வேறொரு காருக்குச் சொந்தமானது என மோட்டார் போக்குவரத்து திணைக்களம் தெரிவித்துள்ளது.
காரை வைத்திருந்த சந்தேக நபரிடம் விசாரணை நடத்தியபோது, பண்டாரகம பிரதேசத்தில் உள்ள ஒருவரிடமிருந்து இந்தக் காரை 20 இலட்சத்துக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டு குறித்த கார் பெறப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.