Our Feeds


Tuesday, February 21, 2023

Anonymous

ஐ.நா அமைதி காக்கும் பணியில் ஈடுபட்டிருந்த இலங்கை இராணுவ வீரர் உயிரிழப்பு - காரணம் வெளியானது.

 



மாலியில் ஐ.நா அமைதி காக்கும் பணியில் ஈடுபட்டிருந்த இராணுவ வீரர் ஒருவர் திடீரென நோய்வாய்ப்பட்டு உயிரிழந்ததாக இலங்கை இராணுவ ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.


சம்பவத்தில் உயிரிழந்தவர் மதவாச்சி பகுதியைச் சேர்ந்த 42 வயதான லான்ஸ் கோப்ரல் எம்.ஜி.எல். தேசப்பிரிய  என்ற 6ஆவது சர்வீஸ் கார்ப்ஸில் பணிபுரிந்த இரண்டு குழந்தைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.


இவர் 2022 இல் அமைதிப் பணிக்காக நாட்டை விட்டு வெளியேறியதாகவும், ஓகஸ்ட் 2023 இல் நாடு திரும்பத் திட்டமிட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


லான்ஸ் கோப்ரல் தேசப்பிரிய கடந்த 11ஆம் திகதி மாலியில் உள்ள பனாகோவில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையினால் நடத்தப்படும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் திடீர் மாரடைப்பால் உயிரிழந்துள்ளார்.


மாலியின் மனிதாபிமான நடவடிக்கைகளின் தலைவரான டேனிலா க்ரோஸ்லாக் தலைமையில் ஐக்கிய நாடுகள் சபை கடந்த 16 ஆம் திகதி மரபுவழியாக இறுதிச் சடங்குகளை நடத்தியது.


இந்நிலையில், லான்ஸ் கோப்ரலின் உடல் நாளை (22) இலங்கைக்கு கொண்டு வரப்படவுள்ளதுடன், இறுதிக் கிரியைகள் இலங்கை இராணுவ முறைப்படி அநுராதபுரத்தில் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »