தற்போதைய நிலவரப்படி, இலங்கையில் வாகன விற்பனை
பூஜ்ஜியமாக வீழ்ச்சியடைந்துள்ளதாக மோட்டார் இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.யாராவது காரை விற்க நினைத்தாலும், புதிய கார் வாங்க யாரும் முயற்சிக்க மாட்டார்கள் என அச்சங்கத்தின் செயலாளர் பிரசாத் குலதுங்க தெரிவித்தார்.
இந்த நிலையால் கார் விற்பனை முற்றிலுமாக நின்றுவிட்டது என்றும் அவர் கூறினார்.
கொரோனா தொற்றினால் இந்த தொழில்துறை முற்றாக வீழ்ச்சியடைந்துள்ளதுடன், வாகன இறக்குமதியை நிறுத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்ததன் காரணமாகவும் இத்தொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள் மாற்றுத் துறைகளுக்குத் திரும்பியுள்ளனர் எனவும் அவர் கூறினார்.