புதிய வருமான வரி சட்டம் தொடர்பில் கலந்துரையாடுவதற்கு தொழிற்சங்க நிபுணர்களின் ஒன்றியம் இன்று (பெப்.25) ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்து கலந்துரையாடவுள்ளது.
தாங்கள் விடுத்து கோரிக்கைக்கு அமைய ஜனாதிபதி இதற்கு இணக்கம் தெரிவித்ததாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் ஊடக பேச்சாளர் வைத்தியர் சமில விஜேசிங்க தெரிவித்துள்ளார்.
அதன்படி, இன்று (பெப்.25) இடம்பெறவுள்ள கலந்துரையாடல் வெற்றியளிக்காவிடின் எதிர்வரும் முதலாம் திகதிக்கு பின்னர் நாட்டிற்கு மிகத் தீர்மானிக்க காலமாக மாறுக்கூடும் எனவும் ஊடக பேச்சாளர் வைத்தியர் சமில விஜேசிங்க எச்சரிக்கை விடுத்துள்ளார்.