டொலர் பிரச்சினை காரணமாக பொலிஸ் குதிரைகளுக்கு கொண்டைக்கடலை, உளுந்து, சோளம் போன்ற உள்ளூர் உணவுகளை பொலிஸ் குதிரைகளுக்கு அறிமுகப்படுத்தும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் குதிரைப்படை பிரிவு தெரிவித்துள்ளது.
குதிரைகளுக்கு உள்ளூர் உணவை வழங்குவதற்கான பரிசோதனைகள் மிகவும் வெற்றியடைந்துள்ளதாக பிரிவின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, பொலிஸ் குதிரைப்படை பிரிவுக்கு மேலும் 12 குதிரைகளை வெளிநாட்டிலிருந்து கொள்வனவு செய்வதற்கு அனுமதி கிடைத்துள்ளதாகவும் அந்த அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.