"வடக்கில் இருந்து கிழக்கு நோக்கி" பேரணியில் கலந்து கொண்டமை, சட்டவிரோதமான பேரணியில் கலந்து கொண்டவர்கள் என குற்றம் சாட்டி வேலன் சுவாமிக்கு யாழ். பொலிஸார் அழைப்பாணை வழங்கியுள்ளனர்.
கடந்த சனிக்கிழமை சுதந்திர தினத்தன்று , யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் இருந்து கிழக்கு நோக்கிய பேரணி இடம்பெற்றது.
குறித்த பேரணியில் கலந்து கொண்டமை சட்டவிரோதமானது என குறிப்பிட்டு இன்றைய தினம் புதன்கிழமை சிவகுரு ஆதீனத்தில் வைத்து வேலன் சுவாமிகளிடம் சிவில் உடையில் சென்றவரகள் தம்மை பொலிஸார் என அடையாளப்படுத்தி அழைப்பாணையை வழங்கியுள்ளனர்.
இதேவேளை குறித்த அழைப்பாணையில், சிவஞானம் சிறிதரன் உள்ளிட்ட 7 பேருக்கு எதிராக , சட்டவிரோத பேரணியில் கலந்து கொண்டவர்கள் என குற்றம் சாட்டப்பட்டுள்ளது.