உத்தியோகப்பூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு நாட்டிற்கு வந்துள்ள பாகிஸ்தான் கடற்படை தளபதி மொஹம்மட் அம்ஜத் கான் நியாஸி ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
ஜனாதிபதி செயலகத்தில் இந்த சந்திப்பு நேற்று (27) இடம்பெற்றுள்ளது.
இதன்போது, இலங்கைக்கும் - பாகிஸ்தானுக்கும் இடையிலான கடல்சார் பிராந்திய ஒத்துழைப்பை வலுப்படுத்துவது மற்றும் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவினை மேலும் மேம்படுத்துவது குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளது.