தங்களது கச்சா எண்ணெய்க்கு மேற்கத்திய நாடுகள் விலை வரம்பு நிர்ணயித்துள்ளதற்கு பதிலடியாக, எண்ணெய் உற்பத்தியை அடுத்த மாதத்திலிருந்து குறைக்கவிருப்பதாக ரஷ்யா கடந்த இரு தினங்களுக்கு முன்பு வெள்ளிக்கிழமை அறிவித்தது.
விலை வரம்பை நேரடியாகவோ, மறைமுகமாகவோ அமல்படுத்தும் நாடுகளுக்கு இனி எண்ணெய் ஏற்றுமதி செய்யப்போவதில்லை.
அதற்கேற்ப, அடுத்த மாதம் முதல் கச்சா எண்ணெய் உற்பத்தியில் தினமும் 5 லட்சம் பேரல்கள் குறைக்கப்படும் என ரஷ்யா அறிவித்துள்ளது.
இந்த அறிவிப்பால், ரஷ்ய எண்ணெயை பெரிதும் சார்ந்திருக்கும் ஐரோப்பிய நாடுகள் பாதிக்கப்படும் என்று கூறப்படுகிறது.