நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட துருக்கி மற்றும் சிரியா ஆகிய இரு நாட்டு மக்களுக்கும் 3 மாதங்கள் வரையிலான அவசரகால விசாக்களை வழங்க ஜெர்மன் அரசாங்கம் முன்வந்துள்ளது.
இதுபற்றி அந்நாட்டு உள்துறை அமைச்சர் நான்சி பீசர் தெரிவிக்கையில் ,
பில்த் என்ற தினசரி பத்திரிகைக்கு அளித்த பேட்டியின்போது, பேரிடர் பாதித்த பகுதிகளில் இருந்து தங்களது நெருங்கிய உறவினர்களை ஜெர்மன்க்கு அழைத்து வரும் துருக்கி மற்றும் சிரியா நாட்டு மக்களை ஜெர்மன்க்குள் வர அனுமதிக்க விரும்புகிறோம்.
அவர்கள் தங்களது குடும்பத்தினருடன் வரலாம். இதற்காக விசா கெடுபிடிகள், அரசு விதிகள் ஆகியவை இருக்காது. இது அவசரகால உதவி என கூறியுள்ளார்.
நிலநடுக்க பாதிப்பில் சிக்கி தவிப்பவர்களுக்கு உதவியாக, இந்தியா போன்ற உலக நாடுகள் மருத்துவ பொருட்கள், குளிர்கால போர்வைகள், விரிப்புகள் உள்ளிட்ட அத்தியாவசிய நிவாரண பொருட்களை விமானங்களில் அனுப்பி வருகின்றன.
20-க்கும் மேற்பட்ட வெளிநாடுகளை சேர்ந்த பேரிடர் நிவாரண படையினர் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தொடர்ந்து மீட்பு மற்றும் நிவாரண பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.