Our Feeds


Saturday, February 4, 2023

ShortNews Admin

தேர்தல் நடக்குமா? நடக்காதா? அரசாங்கத்தின் தீர்மானம் என்ன?



உள்ளூராட்சி மன்றத் தேர்தல் குறித்த திகதியில் நடைபெறுமா இல்லையா என்பது குறித்த தீர்மானம் எதிர்வரும் 8ம் திகதி அறிவிக்கப்பட உள்ளதாக அரசாங்கத்தின் உயர்மட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பிரதமர் தினேஷ் குணவர்தன மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ஷ, நாமல் ராஜபக்ஷ, சாகர காரியவசம் உள்ளிட்டோர் கடந்த 1ஆம் திகதி பொஹொட்டு அலுவலகத்தில் சந்தித்த போது, ​​’அரசாங்கத்தின் சரியான கருத்தை தெரிவிக்க வேண்டும்’ என பசில் ராஜபக்ஷ பிரதமரிடம் கடுமையாக வலியுறுத்தினார்.

இதேவேளை, எதிர்வரும் 8ஆம் திகதி ஆளும் கட்சி ஒன்று கூடும் எனவும், அங்கு ஆளும் கட்சியின் சரியான கருத்தை அறிந்து அது தொடர்பில் தெரிவிக்கத் தயார் எனவும் பிரதமர், பசில் ராஜபக்ஷவிடம் அப்போது உறுதியளித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

தேர்தலை நடத்துவது குறித்து முடிவெடுக்கும் முழு உரிமையும் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு ஒப்படைக்கப்பட்டாலும், உள்ளூராட்சி அமைச்சராக பிரதமர் தினேஷ் குணவர்தன செயற்படுவதால் இவ்விடயம் தொடர்பில் அரசாங்கத்தின் கருத்து அவசியமானது என பசில் ராஜபக்ஷ பிரதமர் தினேஷ் குணவர்தனவிடம் வலியுறுத்தியுள்ளார்.

இந்த தேர்தலை சிறிது காலத்திற்கு ஒத்திவைக்க தலையிடுமாறு மாவட்ட அமைப்பாளர்கள் குழுவொன்று முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவிடம் கோரியுள்ளதாகவும், ஆனால் அந்த விடயத்தில் தாம் தலையிட முடியாது எனவும் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், தமக்கு ஏற்பட்ட அழுத்தத்தின் காரணமாக வாக்களிக்கும் திகதி எப்போது என்று பிரதமர் தினேஷ் குணவர்தனவிடம் பசில் ராஜபக்ஷ கேட்டதாகவும் அரசாங்கத்தின் பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டார்.

வாக்குப்பதிவு திகதி தீர்மானிக்கப்படாவிட்டாலும் பசில் ராஜபக்ச அணி தேர்தலுக்கு தயாராகிவிட்டதாகவும் அதன் பிரச்சார நடவடிக்கைகள் இன்னும் ஒரு வாரத்திற்குள் நிறைவடைந்து முதல் சுற்று கம்பஹா மற்றும் குருநாகலில் இருந்து ஆரம்பமாகும் எனவும் மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »