பொலிஸ் பாதுகாப்பு நடவடிக்கையில் இருந்து பொலிஸ் உயர் அதிகாரிகள் விலகியுள்ளதால், வாக்குச் சீட்டு உள்ளிட்ட தேர்தல் அச்சிடும் நடவடிக்கைகளுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகளை முன்னெடுப்பதில் சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
வாக்குச் சீட்டு அச்சிடுவதற்கு 60 பேர் கொண்ட பொலிஸ் குழுவொன்று கோரப்பட்ட போதிலும், மூன்று பொலிஸ் உத்தியோகத்தர்களே வழங்கப்பட்டுள்ளதாக அரச அச்சக திணைக்களத்தின் அச்சகர் கங்கானி கல்பனா லியனகே தெரிவித்தார்.
உரிய பொலிஸ் பாதுகாப்பின்றி வாக்குச் சீட்டுகள் அச்சிடப்பட்டமை தொடர்பில் ஊழியர்களின் தொழிற்சங்க அச்சகப் பிரதானிகளினால் முன்வைக்கப்பட்ட கடும் குற்றச்சாட்டுகள் காரணமாக, தொழிலாளர்கள் முன்னிலையில் வாக்குச் சீட்டுகளை மீள எண்ணி சான்றிதழ் வழங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இதனால் வாக்குச் சீட்டுகள் மீள எண்ணும் பணி நாளை (16) நடைபெறவுள்ளது.
இதேவேளை, வாக்குச் சீட்டு அச்சிடுவதற்கு போதிய பாதுகாப்பை வழங்க தேர்தல்கள் ஆணைக்குழு தலையிடுமாறு அரசாங்க அச்சக அதிகாரி மீண்டும் கோரிக்கை விடுத்துள்ளார்.