Our Feeds


Wednesday, February 1, 2023

News Editor

உலக வங்கியின் உதவித் திட்டம் தொடர்பில் கலந்துரையாடல்


 முக்கிய பொருளாதார சீர்திருத்தங்கள் – உலக வங்கியின் பூர்வாங்க நடவடிக்கைகள், தொடர்பிலான மீளாய்வுக் கலந்துரையாடல் நேற்று  (31) ஜனாதிபதி அலுவலகத்தில் தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்கவின் தலைமையில் இடம்பெற்றது.

உலக வங்கியின் உதவித் திட்டம் குறித்து இதன்போது விரிவாக கலந்துரையாடப்பட்டதுடன், நிதி மேற்பார்வை மற்றும் கடன் முகாமைத்துவத்தை மேம்படுத்துதல், வரி நிர்வாகக் கொள்கையை மேம்படுத்துதல், இறையாண்மை நிதித் துறையில் ஏற்படும் படிப்படியான அபாயத்தைக் குறைத்தல், சமூகப் பாதுகாப்பு நிறுவனங்களின் விநியோகக் கட்டமைப்பு மற்றும் இலக்குகளை வலுப்படுத்துதல், கொள்கை நிச்சயமற்ற தன்மையைக் குறைத்தல் மற்றும் பொருளாதாரத்தின் போட்டித்தன்மையை அதிகரிப்பது போன்ற விடயங்கள் மற்றும் அவற்றை நடைமுறைப்படுத்துவதற்கு மேற்கொள்ளப்பட வேண்டிய ஆரம்ப நடவடிக்கைகள் குறித்தும்  கலந்துரையாடப்பட்டுள்ளது.

அத்துடன், இந்த ஆரம்பகட்ட நடவடிக்கைகளை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டியதன் அவசியத்தை சாகல ரத்நாயக்க வலியுறுத்தியுள்ளார். 

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »