உள்ளூராட்சி மன்றத் தேர்தலை மார்ச் 9ஆம் திகதி நடத்துவது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் தற்போது வெளியாகியுள்ளது.
339 உள்ளூராட்சி மன்றங்களுக்கு நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் பதிவு செய்யப்பட்ட 58 அரசியல் கட்சிகள் மற்றும் 329 சுயேச்சைக் குழுக்களைச் சேர்ந்த 80,720 வேட்பாளர்கள் போட்டியிடவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.