ATM இயந்திரங்கள் அமைக்கப்பட்டுள்ள பகுதிகளில் பாதுகாப்பைப் அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கடந்த காலங்களில் இடம்பெற்ற ATM கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடைய சந்தேகநபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர், சட்டத்தரணி நிஹால் தல்தூவ தெரிவித்துள்ளார்.