உயர்தரப் பரீட்சை விடைத்தாள்களை மதிப்பீடு செய்யும் ஆசிரியர்களுக்கு நாளாந்தம் 3000 ரூபா கொடுப்பனவு வழங்குவதற்கு அனுமதி கோரி கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த அமைச்சரவையில் இன்று (06) பத்திரம் சமர்ப்பிக்கவுள்ளார்.
இதற்கான மதிப்பிடப்பட்ட தொகை சுமார் 800 கோடி ரூபா என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பயணக் கட்டணம் உள்ளிட்ட செலவுகள் அதிகரித்துள்ளதால், இந்த ஆண்டு மதிப்பீட்டு நடவடிக்கைகளில் ஆசிரியர்களின் பங்களிப்பு குறைவாக உள்ளதால், அதற்கேற்ப நாளாந்த கொடுப்பனவை வழங்குவதற்கு அமைச்சு நடவடிக்கை எடுத்து வருகிறது. இம்மாதம் 22ஆம் திகதி முதல் மதிப்பீட்டு பணி தொடங்கவுள்ளது.